கொரோனா வைரஸின் தாக்கம் சற்றும் குறையாமல் உள்ளது. இதில், ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகமாகும்.
ஒட்டுமொத்த உலக அளவில் நேர்ந்த உயிர் பலிகளில் மூன்றில் இரு பங்கு ஐரோப்பிய நாடுகளில் நடந்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் இதுவரை ஒரு லட்சதத்து 501 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன, 11 லட்சத்து 36 ஆயிரத்து 672 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஐரோப்பாவில் முதன்முதலில் பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது இத்தாலியில்தான். அங்கு இதுவரை கொரோனா வைரஸுக்கு 23 ஆயிரத்து 227 பேர் பலியாகியுள்ளனர்.1.75 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாக இத்தாலியில் உயிரிழப்புகள் படிப்படியாகக் குறைந்து வருகிறது, 45 ஆயிரம் பேர் வரை இதுவரை குணமடைந்துள்ளனர்.
பிரான்ஸில் இதுவரை கொரோனா வைரஸுக்கு 19 ஆயிரத்து 323 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 642 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற நாட்களோடு ஒப்பிடுகையில் பிரான்ஸிலும் உயிரிழப்புகள் குறைந்து வருகின்றன. இதுவரை கொரோனா வைரஸால் பிரான்ஸில் 1.51 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 36 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.
ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்துள்ளது. உயிரிழப்புகளில் 20 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இரண்டாவது அதிக உயிரிழப்புகள் நடந்த நாடாடு ஸ்பெயினாகும்.
அதேபோல அந்நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் 2 லட்சத்தை நெருங்குகிறது. இதுவரை அங்கு 1.94 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 75 ஆயிரம் பேர் வரை குணமடைந்துள்ளனர்
ஜெர்மனியில் இதுவரை கொரோனாவுக்கு 1.43 லட்சம்பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் ஜெர்மனியில் உயிரிழப்பு குறைவுதான். இங்கு கொரோனாவுக்கு இதுவரை 4,538 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 85,400 பேர் குணமடைந்துள்ளனர்.