சீனாவின் வுகானில் உள்ள பரிசோதனை ஆய்வு கூடத்தில் உள்ள குளர்சாதனபெட்டிகளிகளில் கொரோனா வைரஸ் உள்ளிட்ட 1500 வைரஸ்களின் மாதிரிகள் வைக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்து அதிர்ச்சி புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படங்கள் கடந்த மார்ச் மாதத்தில் டுவிட்டரில் வெளியிடப்பட்ட நிலையில் பின்னர் அழிக்கப்பட்டது. ஆனால் அதன் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
கொரோனா வைரஸ் வவ்வாலில் இருந்து பரவவில்லை, சீனா ஆய்வகத்தில் இருந்து கசிந்தது என குற்றஞ்சாட்டப்பட்டு வரும் நிலையில் இந்த புகைப்படங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிலும் ஒரு குளிர்சாதனப்பெட்டியின் கதவு உடைந்த நிலையில் உள்ளது.
இதில் வவ்வால் கொரோனா வைரஸின் மாதிரிகள் இருந்துள்ளது.
இந்த புகைப்படங்கள் China Daily பத்திரிக்கை மூலம் 2018ல் வெளியிடப்பட்ட நிலையில் கடந்த மார்ச் மாதம் அதன் அதிகாரபூர்வ டுவிட்டரில் வெளியிடப்பட்டு பின்னர் அழிக்கப்பட்டது.
குளிர்சாதனப்பெட்டி உடைந்திருந்த நிலையில் அதன் மூலம் லீக்காகி வெளியேறிருக்கலாம் என பலரும் கூறுகிறார்கள்.
மேலும் பலர் கூறுகையில், இதை விட நல்ல நிலையில் எங்கள் வீட்டில் உள்ள குளர்சாதனப்பெட்டிகள் இருக்கும், ஆனால் ஆபத்தான வைரஸ் மாதிரிகளை இப்படியா வைப்பது என கேள்வியெழுப்பியுள்ளனர்.
அமெரிக்காவும் இது தொடர்பில் சந்தேகம் கொண்டுள்ள நிலையில் டிரம்பும் இது குறித்து சமீபத்தில் பேசினார்.
இது குறித்து அமெரிக்க புலனாய்வு துறை தெரிவிக்கையில், கொரோனா வைரஸ் வெடிப்பு தொடங்கிய சிறிது நேரத்திலேயே, ஆய்வகத்தின் அதிகாரிகள் வைரஸின் மாதிரிகளை அழித்தனர்.
ஆரம்ப அறிக்கைகள் மற்றும் மிகைப்படுத்தப்பட்ட கல்வித் தாள்களையும் அழித்துவிட்டனர்.
பின்னர் வுகானின் சந்தையில் உள்ள விலங்குகள் மூலம் கொரோனா பரவியதாக குற்றம் சாட்ட முயன்றனர் என தெரிவித்துள்ளனர்.
பிரித்தானிய அரசாங்கத்தின் வட்டாரங்கள் தெரிவிக்கையில், வைரஸ் ஒரு விலங்கிலிருந்து தோன்றியது என சான்றுகள் கூறுகின்றன.
அதே சமயம் இது ஆய்வகத்தில் விஞ்ஞானிகள் கவனக்குறைவு மற்றும் விபத்து ஏற்பட்டதன் காரணமாக மனிதர்களுக்கு முதன்முதலில் பரவியிருக்கலாம் என்ற கோட்பாட்டுடன் இன்னும் ஒத்துப்போகிறது என தெரிவித்துள்ளது.
சீனாவில் ஒப்பீட்டளவில் கொரோனா இறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது, இதன்மூலம் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பயனுள்ளவை என்பதை நிரூபிக்கிறது.
கடுமையான ஊரடங்கு, லாக்டவுன் நடவடிக்கைகள் மூலம் வைரஸின் பரவலை திறம்பட குறைத்து, தொற்றுநோய்களை அந்நாடு குறைத்துள்ளது.