கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 13 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 269 ஆக அதிகரித்துள்ளது.
இன்று முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் 15 பேர் கோரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட அனைவரும் கொழும்பில் தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.