பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 596 பேர் பலியாகியுள்ள நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16-ஆயிரத்தை தாண்டியுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக ஐரோப்பிய கண்டத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் பிரித்தானியா உள்ளது.
நாட்டில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 596 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,060-ஐ தொட்டுள்ளது. கடந்த சில தினங்களை ஒப்பிடும் போது, கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நான்கு நாடுகள் வெவ்வேறு நேரங்களில் இறப்புகளை பதிவு செய்வதால், ஒரு சில நேரங்களில் இது மாறுபடலாம் இருப்பினும், Doh-யின் இறப்பு எண்ணிக்கை 16,060-ஆக உள்ளது.
இங்கிலாந்து (14,400), ஸ்காட்லாந்து (903), வேல்ஸ் (575) மற்றும் வடக்கு அயர்லாந்து (194) ஆகியவற்றின் ஒருங்கிணைந்த எண்ணிக்கையில் வேறுபாடு உள்ளது. இதில் 16 பேரின் எண்ணிக்கை உயர்ந்து 16,072 ஆக உள்ளது. இந்த வேறுபாட்டை அரசாங்கம் கூறியுள்ளது.
இதற்கிடையில் சீனாவில் இருந்து 10 மில்லியன் மாஸ்க்குகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களுடன் புறப்பட்ட விமானம் ஸ்காட்லாந்தில் இருக்கும் Glasgow Prestwick விமானநிலையத்தில் இன்று தரையிரங்கியுள்ளது.