இன்று இலங்கையில் அடையாளம் காணப்பட்ட 15 கொரோனா தொற்றாளர்களில் கர்ப்பிணி பெண் ஒருவரும் உள்ளடங்குகிறார்.
கொரொனா பாதிப்பு வலயமாக அடையாளப்படுத்தப்பட்ட கொழும்பு கொசல்வத்தை, பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்த இளம் கர்ப்பிணிப் பெண்ணே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணொருவர் இன்று கோட்டை வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.
தனிமைப்படுத்தப்பட்ட வலயத்திலிருந்து அவர் கொண்டு வரப்பட்டிருந்ததால், தனி விடுதியில் அனுமதிக்கப்பட்டு சோதனைக்குள்ளாக்கப்பட்டார்.
அதன்போது அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர் ஐடிஎச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். வைத்தியசாலை விடுதியும் கிருமி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.