நாட்டில் சில பிரதேசங்களில் எதிர்வரும் சில தினங்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென், ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா உள்ளிட்ட மாவட்டங்களில் இவ்வாறு இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பிரதேசங்களில் 100 மில்லி மீற்றரை விட அதிக மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு இப்பிரதேசங்களில் அவ்வப்போது காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும். எனவே இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதற்கமைய யாழ்ப்பாணம், மன்னார், புத்தளம், குருணாகல், கம்பஹா, கேகாலை, கண்டி, கொழும்பு, நுவரெலியா, பதுளை, மொனராகலை, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.