பொதுத்தேர்தலுக்கான திகதி ஒன்றை நிர்ணயிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழுத்தம் வழங்கப்படுவதாக ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய கூட்டமொன்று நாளை கொழும்பில் இடம்பெறவுள்ள நிலையில், யாழில் இன்று (19) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கொரோனா அச்சம் காரணமாக எதிர்வரும் 25ம் திகதி தேர்தலினை நடாத்துவது என்பது முடியாத செயலாகும். இதனால் தேர்தலினை பிற்போட யோசித்திருந்தோம்.
அத்துடன், இதற்கமைய நீதிமன்றத்தின் ஆலோசனையினை பெற்றுக்கொள்ளுமாறு நாம் ஜனாதிபதிக்கு தெரிவித்தோம். எனினும் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்து எங்களை ஒரு திகதியினை அறிவிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.