கொரோனா அச்சம் உலகையே அச்சுறுத்திவரும் நிலையில், அமெரிக்காவில் ஒரு உள்நாட்டு யுத்தம் ஒன்று வெடித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப் கூறும் எதனையும் நாம் செய்ய மாட்டோம் என்ற கோஷங்களோடு பல மாநில மக்கள் திரண்டு எழுந்துள்ளார்கள்.
இவர்களில் பலர் ஆயுதங்களை ஏந்தியவாறு இருப்பதனால். சில மாநிலங்கள் கட்டுப்பாட்டை இழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெக்ஸ்சாஸ் மாநிலத்தில் ஊரடங்கையும் மீறி பெரும் ஆர்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ள அதேவேளை. நியூ யோர்க் நகரில், அதிபர் டிரம்புக்கு சொந்தமான இடங்களுக்கு முன்னால் போலியான பிணப் பைகள் போடப்பட்டு பெரும் ஆர்பாட்டங்கள் இடம்பெற்று வருகிறது.
இதனை அமெரிக்க பொலிசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் கூறப்படுகின்றது.
அதேபோல நியூ ஹம்பர்ஷியர், மார்லிலான், வேர்ஜீனியா, மற்றும் நீயூ ஜேர்சி ஆகிய மாநிலங்களில் பெரும் ஆர்பாட்டம் இடம்பெற்று வருகிறது. இந்த ஆர்பாட்டங்கள் அதிபர் ரம்புக்கு எதிராகவும் அவர் பிறப்பித்துள்ள லாக் டவுனுக்கு எதிராகவும் இடம்பெற்று வருகிறது.
இந்த நிலையில் இதே நிலை நீடித்தால், அமெரிக்காவில் உள்ள பல லட்சம் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள், தங்கள் கைகளில் துப்பாக்கி ஏந்தி போராடும் சூழ் நிலை வரலாம் என்ற அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.