ஜப்பானில் இன்று அதிகாலை 5:30மணி அளவில், சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்தாக USGS தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.
ஐப்பான், நகரான மியாகியில் இருந்து 50 கிலோ மீற்றருக்கும் குறைவான இடத்தில் இந்த நில நடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நில நடுக்கம் பசிபிக் கடற்பரப்பிற்கும் அடியில் 41.7 கிலோமீற்றர் தொலைவில் ஏற்பட்டுள்ளது.
ஐப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் இந்த நிலநடுக்கத்தை ரிக்டர் அளவு கோலில் 6.1 ஆக கணக்கிட்டுள்ளது. மேலும், அதிகாலை 5:30 மணிக்கு நிகழ்ந்ததாக தெரிவித்துள்ளது. இதனால், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று ஜப்பானின் கியோடோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால், பெருத்த சேதங்கள் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐப்பானில் இதுபோன்று அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட காரணம் அந்நாடு பசிபிக் “ரிங் ஆஃப் ஃயர்” பகுதியில் அமைந்துள்ளது. எனவே இதுபோன்ற நிகழ்வு அடிக்கடி ஏற்படுகிறது.
மியாகி மாகாணத்தில் 2011ஆம் ஆண்டு 130 கிலோமீற்றர் தொலைவில் 9.0 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது அது பெரிய சுனாமியாக உருவாகி புகுஷிமா அணு உலையை சேதப்படுத்தியது. இதில், கிட்டத்தட்ட 16,000பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.