வவுனியா வைத்தியசாலையில் நேற்றுமாலை சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
சம்பவத்தில் தேக்கவத்தையை சேர்ந்த அயிஸ்டன் சர்மி என்ற 7 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த சிறுமிக்கு கொரோனா நோய் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்திருந்தாரா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரின் இரத்த மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைகளிற்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் சிறுமிக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைபிரிவும் தொற்றுநீக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.