யாழில் இன்று காலை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டிருந்த நிலையில் யாழ் குடிமகன்கள் மதுபான சாலையில் குழுமிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது
கொரோனா பரவலை தடுப்பதற்காக நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு இன்று தளர்த்தப்பட்டது.
கிட்டத்தட்ட ஒரு மாதமாக மதுக்கடைகள் திறக்காததால் இன்று காலையில் மதுக்கடைகள் திறந்ததும், முதல் வேலையாக மதுப்பிரியர்கள் மதுக்கடைகளை நோக்கியே ஓடிச் சென்றனர்.
மீண்டும் ஊரடங்கு அமுல்படுத்தினால் என்ற ஆச்சத்தில் அவர்கள் மதுப் போத்தல்களை கொள்வனவு செய்து கொண்டு சென்றதையும் அவதானிக்க முடிந்தது.
இதேவேளை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மதுக்கடைகளில் மதுப்பிரியர்கள் அலைமோதும் புகைப்படங்கள் சமூக ஊடங்களில் வெளியாகி வருகின்றன.