அமெரிக்க எண்ணெயின் விலை 1999 ஆம் ஆண்டிலிருந்து காணப்படாத அளவிற்கு கடும் வீழ்ச்சியடைந்துள்ளது,
எண்ணெயின் தேவை குறைந்துவிட்டதாலும் சேமிப்பு மையங்கள் நிரம்பிவிட்டதால் விலை கடும் வீழச்சியடைந்துள்ளது.
அமெரிக்க எண்ணெய்க்கான அளவுகோலான மேற்கு டெக்சாஸ் இடைநிலை (டபிள்யூ.டி.ஐ) ஒரு பீப்பாயின் விலை திங்கள்கிழமை காலை ஆசிய வர்த்தகத்தில் 14% குறைந்து 15.65 டொலராக இருந்தது.
கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது எண்ணெய் சந்தை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது, தொழிற்சாலைகள் மற்றும் உற்பத்தி ஆலைகள் மூடப்பட்ட நிலையில் எண்ணெயின் தேவை கடுமையாக குறைந்துள்ளது.
அமெரிக்காவின் சேமிப்பு மையங்கள் எண்ணெயின் விலை குறைப்பை சமாளிக்க சிரமப்படுகின்றன. சேமிப்பு நிரப்புதலுடன், இனி யாரும் எண்ணெய் விநியோகம் செய்ய விரும்பவில்லை என்று ஆக்சிகார்ப் நிறுவனத்தின் உலகளாவிய சந்தை மூலோபாய நிபுணர் ஸ்டீபன் இன்னெஸ் கூறினார்.
முக்கிய அமெரிக்க தயாரிப்பாளர்கள் மறுதொடக்கம் செய்ய அதிக செலவுகளைத் தவிர்ப்பதற்காக உற்பத்தியை குறைக்க தயங்குகிறார்கள்.
ஆனால் சிறிய தயாரிப்பாளர்கள் குறைந்த விலையில் நிதி குறைப்பை எதிர்கொள்கின்றனர் மற்றும் பலர் உற்பத்தியைக் கட்டுப்படுத்தினர் அல்லது மூடிவிட்டனர்.
இப்போது தேவை குறைவாக இருந்தாலும் சேமிப்பு மையங்களுக்கு எண்ணெய் விநியோகிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.