கேரளாவில் தனது இருசக்கர வாகனத்தினை பொலிசார் பறிமுதல் செய்ததால் இளைஞர் ஒருவர் சாலையில் தீக்குளித்துள்ளது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாவினால் நாடு எங்கும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் சில மக்கள் அதனை கருத்தில் கொள்ளாமல் வெளியே சுற்றிக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அடுத்துள்ள சூரியநெல்லி பகுதியில் விஜி என்பவருடைய மகன் விஜய பிரகாஷ் (24) தனது வாகனத்தை பொலிசார் பறிமுதல் செய்ததால் நடுரோட்டில் தீக்குளித்துள்ளார்.
கட்டிட தொழிலாளியாக இருக்கும் இவர் கடந்த 4,5 நாட்களாக தனது இரு சக்கர வாகனத்தில் தடை உத்தரவினை மீறி சுற்றிக்கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது. பொலிசார் கண்டித்தும் கேட்காததால் அவரது வாகனத்தினை பறிமுதல் செய்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த விஜய பிரகாஷ் தன் மீது டீசலை ஊற்றிக்கொண்டு, என் பைக்கை தராவிட்டால் காவல்துறையினரையும் கொழுத்தி தானும் கொழுத்தி கொள்வேன் என மிரட்டியுள்ளார்.
பின்பு திடீரென தன்னை தானே கொளுத்தி கொண்டு சூரியநெல்லி டவுன் பகுதியில் நடு ரோட்டில் நடந்தவரை அப்பகுதி மககள் தண்ணீர் மற்றும் துணிகளைக் கொண்டு தீயை அணைத்துள்ளனர்.
தீக்காயத்தில் மயக்கமடைந்த விஜய பிரகாஷை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.