முன்னாள் அமைச்சர் மனோ கணேசனை கைது செய்யுமாறு கோரி பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணியின் தலைவரான கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ரவி குரமார் இன்று பகல் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.
கொரோனா வைரஸினால் பாதிக்கப்படுபவர்கள் குறித்த தகவல்களை அரசாங்கம் மூடிமறைத்து போலித் தகவல்களை வழங்கிவருவதாக முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் கூறியதாகவும், அதற்காக அவர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட வேண்டும் என்றும் அவர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.