கொரோனா’ வைரஸ் பரவக்கூடிய அபாயம் இலங்கையில் இருந்து இன்னும் முழுமையாக நீங்கவில்லை.
இது தொடர்பில் உலக சுகாதார அமைப்போ அல்லது இலங்கை சுகாதார பிரிவோ இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிடவில்லை.
எனினும், அத்தியாவசிய சேவைகளை தடையின்றி முன்னெடுக்கும் நோக்கிலும், பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வகையிலுமே ஊரடங்கு இலகுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும், சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் போன்ற சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன், பொதுபோக்குவரத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது பற்றியும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இவை எதையும் காதில் போட்டுக்கொள்ளாத இலங்கை மக்கள் ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் பேருந்துளில் நிற்பதையே இங்கு காண்கின்றீர்கள்.
இந்த நிலையில் மக்களின் இந்த உதாசீனமானது நாட்டிற்கு பெரும் பேரழிவை ஏற்படுத்தும் என அவதானிகள் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன் எதையாவது பயன்படுத்தி இதனை இப்போதே தடுக்காவிட்டால், நாளை இன்னொரு சீனாவாகவோ இத்தாலியாகவோ ஏன் இன்னொரு அமெரிக்காவாகவோ மாறுவதை யாராலும் தடுக்க முடியாது என பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.