இலங்கையில் அதிகமான கொரோனா வைரஸ் நோயாளர்கள் பதிவாகிய கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையில் வசிக்கும் ஆயிரம் பேர் விரைவில் இராணுவத்தினரால் நடத்தப்படும் தனிமைப்படுத்தும் முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி அந்த பிரதேசத்தைச் சேர்ந்த 242 குடும்பங்களில் 1010 பேர் இவ்வாறு அழைத்துச் செல்லப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு ஆமர்வீதி – பண்டாரநாயக்க மாவத்தையில் இதுவரை 57 கொரோனா வைரஸ் நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு நேற்று மாத்திரம் அங்கு 32 நோயாளர்கள் இனங்காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


















