ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் மிகச் சிறந்த பந்துவீச்சாளர் விருது லசித் மலிங்காவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியை சேர்ந்த லசித் மலிங்கா ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.
தனது அபார பந்துவீச்சால் ஐ.பி.எல் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை அவர் செய்துள்ளார்.
மலிங்கா அடுத்தடுத்த நான்கு பந்துவீச்சுகளில் நான்கு விக்கெட்டுகளை சாய்த்தவர், மேலும் அவரது யார்க்கர் வகை பந்து வீச்சுகள் பெரிதும் பேசப்பட்டன.
இந்நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சார்பில் மலிங்காவுக்கு மிகச் சிறந்த பந்துவீச்சாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
டேல் ஸ்டெயின், ஆஷிஷ் நெஹ்ரா, சுனில் நரேன், ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட 10 பேர் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்சின் நடுவர் குழுவில் உள்ளவர்களும் மலிங்காவின் சமகால வீரர்களுமான பீட்டர்சன் உள்ளிட்டோர் மலிங்காவை தேர்வு செய்துள்ளனர்.