கொரோனா ஏற்கனவே ஈஸ்டர் உட்பட பல பண்டிகைகளுக்கு இடைஞ்சலாக வந்துவிட்ட நிலையில், ஜேர்மனியில் பிரபலமாக கொண்டாடப்படும் பியர் திருவிழா கொண்டாடப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
ஜேர்மனியில், நாட்டின் தலைவர் முதல் சாதாரண குடிமக்கள் வரை பியர் அருந்தி கொண்டாடும் விழா Oktoberfest என்னும் பியர் திருவிழா.
கொரோனா கட்டுப்பாடுகளால் சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டியுள்ளதால், 6 மில்லியன் மக்கள் வந்து கூடும் பியர் திருவிழாவை அனுமதிக்க இயலாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே, தற்போதைய சூழலை வைத்துப்பார்க்கும் போது, இவ்வளவு பெரிய நிகழ்வை நடத்துவது கூடாத காரியம் என்று கூறியுள்ளார், பவேரியாவின் பிரதமரான Markus Söder.
ஆகவே, முனிச் மேயருடன் கலந்தாலோசித்து பியர் திருவிழாவை ரத்து செய்வது என முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
Oktoberfest என்பது முனிச் நகரில் ஆண்டுதோறும் 6 மில்லியன் மக்கள், செப்டம்பர் 19க்கும் அக்டோபர் 4க்கும் இடையில் கூடி கொண்டாடும் உலகின் பிரமாண்ட பியர் திருவிழா என்பது குறிப்பிடத்தக்கது.