இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய மேலுமொருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 310ஆக அதிகரித்துள்ளது.
இதனடிப்படையில் இன்று மொத்தமாக 6 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக உறுதி செய்யப்பட்டுள்ளனர்.
இதில் ஐவர் கொழும்பு 12, வாழைத்தோட்டம், பண்டாரநாயக்க மாவத்தையில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் எனவும், மற்றவர் இரத்தினபுரியைச் சேர்ந்தவர் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
இலங்கையில் மேலும் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை இன்றைய தினம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் இலங்கையில் தற்போது கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 309ஆக உயர்வடைந்துள்ளது.
இன்றைய தினம் அடையாளம் காணப்பட்ட ஐவரும் கொழும்பு – 12, பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை சுகாதார அமைச்சு உறுதி செய்துள்ளது.
மேலும் இலங்கையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 98 பேர் குணம் அடைந்துள்ளதுடன், ஏழு பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


















