கொழும்பில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளிகள் திடீர் அதிகரிப்பை அடுத்து பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழங்களை மே 11இல் திறப்பது தொடர்பில் அரசாங்கம் மீள் ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளது.
அமைச்சர் பந்துல குணவர்த்தன இந்த தகவலை வெளியிட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பாடசாலைகளையும், பல்கலைக்கழகங்களையும் திறக்கும் திகதி சுகாதார அதிகாரிகளின் பரிந்துரையின் அடிப்படையிலேயே அறிவிக்கப்படும் என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் பல்கலைக்கழகங்களில் கல்விசார் பணியாளர்களின் பணிகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இதன்படி இணையம் மூலமான கவ்விச்செயற்பாடுகள் முக்கியமானவை என்றும் பந்துல குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இலங்கையில் தற்போது 309 கொரோனா வைரஸ் தொற்றாளரகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.