சீனாவின் உகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. குறிப்பாக சிங்கப்பூரில் 8,014 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது. இதுவரை கொரோனாவால் 11 பேர் பலியாகியுள்ளனர்.’
சிங்கப்பூரில் வெளிநாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் வேலை செய்துவருகின்றனர். சிங்கப்பூரில் பெரும்பாலானோர் வெளிநாட்டிலிருந்து வந்து வேலை செய்து வருகின்றனர். இவர்கள் மிக நெருக்கமான விடுதிகளில் கூட்டமாக வசித்து வருகின்றனர். இதனால் அவர்களிடத்தில் வைரஸ் பரவல் அதிகரித்து உள்ளது.
சிங்கப்பூரில் கொரோனாவை கட்டுப்படுத்த மே நான்காம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வைரஸ் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 1426 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து அந்நாட்டுப் பிரதமர் லீ சியன் லுாங், ஜூன் ஒன்றாம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உள்ளார்.




















