கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையில் உள்ள மேலும் 4 குடியிருப்புத் தொகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான பேர் இன்று கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
தற்போது அந்த பகுதியிலேயே 60க்கும் பேர் கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்ட நிலையில் கண்டறியப்பட்டுள்ள நிலையில் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



















