இலங்கையில் பொதுத் தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் அவசியமான அனைத்து ஆதரவு வழங்க முடியும் என சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
சிங்கள தொலைகாட்சி ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் நடத்த முடியுமா இல்லை என்பதனை கூறுவது எங்கள் செயற்பாடு அல்ல. அது தேர்தல் ஆணைக்குழுவினால் எடுக்கும் தீர்மானம்.
எனினும் தேர்தல் நடத்துவதென்றால் அதற்கு அவசியமான அனைத்து ஆதரவினையும் வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் ஒரே நாளில் அதிகமான கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்ட நாளில் அவர் இந்த தகவலை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



















