ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளுக்கு தாயான ஒரு பிரித்தானிய பெண்ணின் கணவர் கொரோனா பாதிப்பிலிருக்க, வருவாயும் இல்லாததால் தவிக்கிறார் அவர்.
இந்த மாத துவக்கத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட எசெக்சைச் சேர்ந்த Giovanni Sapia (53), இரண்டு வாரங்களாக மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது இதயம் 25 சதவிகிதம் மட்டுமே செயல்பட்டுவரும் நிலையில், அவரது மனைவி Anna Savchenko (35), தனியாக தனது நான்கு குழந்தைகளையும் கவனித்துக்கொள்ள வேண்டிய சூழலுக்கு உள்ளாகியுள்ளார்.
வெண்டிலேட்டரில் உள்ள கணவரையும் சந்திக்க முடியாமல் குழந்தைகளுடன் போராடி வருகிறார் அவர்.
இதற்கிடையில், குடும்பத்தில் Giovanni மட்டுமே வேலைக்கு செல்பவர் என்பதால், இப்போது அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், குடும்ப செலவுகளை சமாளிக்க முடியாமலும் குழந்தைகளுக்கு உணவளிக்க முடியாமலும் திணறி வருகிறார் Anna.
ஆகவே, அவரது நண்பர்களும் குடும்பத்தினரும் சேர்ந்து Annaவுக்கு உதவுவதற்காக நன்கொடை வசூலிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.