பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையின் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில் கொரோனா பாதிப்புக்கு இலக்கானவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது.
சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள் எண்ணிக்கை 212 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரதமர் இம்ரான்கான் கொரோனா சோதனைகளுக்கு தம்மை உட்படுத்தியதாக தகவல் வெளியானது.
பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பிரபலமான அறக்கட்டளையின் தலைவர் பைசல் எடி என்பவர் பிரதமர் இம்ரான்கானை கடந்த வாரம் நேரில் சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு நடந்த சில தினங்களுக்கு பிறகு பைசல் எடிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனால் இம்ரான்கானுக்கும் வைரஸ் தொற்று பரவியிருக்குமோ என்ற அச்சம் எழுந்தது. இதையடுத்து, இம்ரான்கான் நேற்று கொரோனா பரிசோதனை செய்துகொண்டார்.
இந்நிலையில், இம்ரான்கானுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பில்லை என்று பரிசோதனையின் முடிவில் தெரியவந்துள்ளதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் ஷபீர் மிர்சா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.