மருத்துவமனைகளில் இருந்து கொரோனாவால் இறந்த சடலங்களை ஊழியர்கள் சவக்கிடங்குகளுக்கு லொறிகளில் கொண்டு செல்வதாக பதறவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
அதிகரிக்கும் கொரோனா இறப்புகள் டிரம்ப் நிர்வாகத்தை கடுமையாக உலுக்கி வருகிறது.
நாளுக்கு நாள் எகிறும் மரண எண்ணிக்கையால் டிரம்ப் நிர்வாகம் செய்வதறியாது திகைத்து நிர்ப்பதாகவும், அரசின் எந்த ஒரு நடவடிக்கையும் பலனளிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
மருத்துவமனைகளில் இருங்து சடலங்களை ஆம்புலன்ஸில் கொண்டு செல்வதற்கு பதிலாக லொறிகளில் சவக்கிடங்குகளுக்கு மாற்றப்படுவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
லொறிகளில் கொண்டு செல்லப்படும் சடலங்கள் அனைத்தும் கொரோனா பாதிப்புக்கு இலக்கானவர்களா அல்லது வேறு நோய்களால் மரணமடைந்தவர்களா என்ற சந்தேகமும் எழுப்பப்படுகிறது.
இதனிடையே, பிலடெல்பியாவின் பொது சுகாதாரத் துறையின் செய்தித் தொடர்பாளர் ஜேம்ஸ் கரோ, இதுபோன்ற நடவடிக்கைகள் சாதாரணமானதோ அல்லது ஏற்றுக்கொள்ளத்தக்கதோ அல்ல என செவ்வாயன்று தெரிவித்துள்ளார்.
இதற்கான நெறிமுறைகள் எதுவும் தற்போதைய சூழலில் எவரும் கடைபிடிப்பதில்லை என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும் இதுபோன்ற சம்பவம் நடந்தது குறித்து சுகாதாரத் துறை திகைத்துப்போயுள்ளது. மேலும் தற்போதுள்ள நெறிமுறைகளைக் குறிப்பிட்ட மருத்துவமனை கடைபிடிக்க வேண்டும் என வலுவாக நினைவுபடுத்துகிறது எனவும் கரோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 820,000 என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள் எண்ணிக்கை 45,000 கடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இது இவ்வாறிருக்க, அமெரிக்கா முழுவதும் ஊரடங்கு உத்தரவுகளை தளர்த்தவும் எதிர்ப்பு தெரிவித்தும் நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.