உலகின் பெரும்பாலான நாடுகள் இன்னும் கையாள்வதற்கான ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் பெரும்பாலான மக்கள் கொரோனா தொற்றுக்கு இலக்காக நேரிடும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரல் எச்சரித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் பேசிய அவர், உலகின் பெரும்பாலான நாடுகள் நோய்த்தொற்றின் ஆரம்ப கட்டத்தில் உள்ளன.
மேலும், ஏற்கனவே பாதிப்புக்குள்ளான நாடுகள் தற்போது அதன் உச்சத்திற்கு வந்துள்ளன.
இந்த சூழலில் எவ்வித தவறுக்கும் இடம் தராதபடி கவனமாக கையாள வேண்டும் எனவும், இன்னும் பல கட்டங்களை தாண்ட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனா வைரஸ் பல காலம் நம்முடன் தங்கும் நிலை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய இக்கட்டான சூழலில் பன்னாட்டு பயணங்களை அனுமதிப்பதில் மிகுந்த எச்சரிக்கை வேண்டும் என் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒருமுறை கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் மீண்டும் தொற்றுக்கு இலக்காகியுள்ளதன் மர்மம் விஞ்ஞானிகளுக்கு இன்னும் பிடிபடவில்லை என உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒப்புக்கொண்டுள்ளார்.