உலகளவில் கரோனா வைரஸின் தாக்கத்தால் பெரும் அழிவு ஏற்பட்டு, பதறிக்கொண்டு இருக்கும் வேலையில் ஈரான் மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு இடையேயான பதற்றமானது குறைந்ததாக இல்லை. அணு ஆயுத பிரச்சனையில் துவங்கி, பல்வேறு பிரச்சனைகளை தொடர்ந்து இரு நாடுகளும் சந்தித்து வருகிறது. இதுமட்டுமல்லாது அங்குள்ள பாரசீக வளைகுடா சர்வதேச கடற்பரப்பில் அமெரிக்க கடற்படையினர் கண்காணிப்பு பணியில் எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த 15 ஆம் தேதியன்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்த 6 அமெரிக்க கடற்படை கப்பலை ஈரானிய படையினர் சுற்றி வளைக்கவே, ஈரான் நாட்டின் கடற்பாறைக்கு சொந்தமாக உள்ள சிறிய ரக படகுகள் அமெரிக்கா கடற்படையை சுற்றி வளைத்து அச்சுறுத்தியது போர் பதற்றத்தை மீண்டும் ஏற்படுத்தியது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், இது குறித்த விஷயத்தை அறிந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவில் உள்ள கப்பலை அச்சுறுத்தும் வகையில் செயல்படும் ஈரான் கப்பலை சுட்டு வீழ்த்தக்கூறி ஆணை பிறப்பித்துள்ளார். இதனால் வளைகுடா பகுதியில் பெரும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரான் இராணுவ செயல்பாட்டிற்காக செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியுள்ளது.