இலங்கையில் ஏப்ரல் 18 முதல் 23 ஆம் திகதிவரையான நாட்களுக்குள் 120 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.
அத்துடன், பொலன்னறுவை மாவட்டத்திலும் ‘கொரோனா’ தொற்றால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மார்ச் 11 ஆம் திகதி முதல் இன்று (23) இரவு 9 மணிவரையான காலப்பகுதியில் 368 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.
இதேவேளை நாட்டில் இன்று மாத்திரம் 31 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் வைரஸ் தொற்றாளர்களில் ஏழு பேர் உயிரிழந்துள்ள நிலையில்107 பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும் 226 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றதுடன் கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 173 பேர் மருத்துவ கண்காணிப்பில் இருந்துவருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.