ஜெர்மன் நிறுவனம் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசி முதல்கட்டமாக 200 பேரிடம் சோதனை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மன் பயோடெக் நிறுவனமான பயோ என் டெக் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசியை மனிதர்களிடம் சோதித்துப் பார்க்க ஜெர்மன் அரசு அனுமதி அளித்துள்ளது.
BNT 162 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசியை பயோ என் டெக்கும், உலகின் மிகப்பெரிய மருந்து நிறுவனங்களில் ஒன்றான ஃபைசரும் இணைந்து உருவாக்கியுள்ளன.
வெக்டர் மற்றும் ஆர்என்ஏ அடிப்படையில் தலா 2 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இவை 18க்கும் 55 வயதுக்கும் இடையிலான நல்ல திடகாத்திரமான 200 பேரிடம் முதலில் சோதித்துப் பார்க்கப்படும் என்றும், அதைத் தொடர்ந்து தொற்று வாய்ப்பு அதிகம் உள்ள நபர்களிடம் இரண்டாம் கட்டமாக சோதனை நடக்கும் எனவும் ஜெர்மன் மருத்துவத் துறை தெரிவித்துள்ளது.
இதேவேளை கொரோனா தடுப்பூசிகளை கொண்டு அமெரிக்காவிலும் கிளினிகல் சோதனகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.