கொரோனா நோய்த் தொற்றால் உணவு உற்பத்தி மற்றும் வர்த்தகத்துக்கு ஏற்படும் பாதிப்புகளை இப்போதே சரி செய்ய உலக நாடுகள் தவறினால், இன்னும் சில மாதங்களில் பஞ்சத்தை எதிர்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் உலக உணவு திட்டப் பிரிவின் செயல் இயக்குநர் டேவிட் பீஸ்லி ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலும் தெரிவித்துள்ளதாவது,
கொரோனா நோய்த் தொற்றுடன் நாம் போராடிக் கொண்டிருக்கும் அதே நேரம் உலகம் ஒரு மாபெரும் பஞ்ச அபாயத்தை எதிர்கொண்டுள்ளது.
இதுவரை உலகில் எங்கும் வறட்சியோ, பஞ்சமோ ஏற்படவில்லை. ஆனால், அதனைத் தடுப்பதற்காக நாம் எடுக்கத் தவறினால், பேரழிவை ஏற்படுத்தும் வகையில் அடுத்த வறட்சியையும் பஞ்சத்தையும் சந்திக்க வேண்டியிருக்கும்.
அதனை தடுக்க வேண்டும்மென்றால், உணவு உற்பத்திக்கான நிதிப் பற்றாக்குறை, உணவு விநியோகம் மற்றும் வர்த்தகத்துக்கான இடையூறுகள் ஆகியவற்றை களையும் நடவடிக்கைகளை உலக அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.
கொரோனா நோய்த் தொற்று என்பது, வெறும் மருத்துவப் பிரச்சனை மட்டுமல்ல அது மாபெரும் வாழ்வாதாரப் பிரச்சனையாகவும் ஆகியுள்ளது.
போர் பதற்றம் நிறைந்த நாடுகளில், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட லட்சகணக்கான பொதுமக்கள் பட்டினி கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் 82.1கோடி பேர் தற்போது பட்டினியுடன் படுக்க செல்கின்றனர். மேலம் 13.5கோடி பேருக்கு போதிய உணவு கிடைப்பதில்லை
கொரோனா நோய்த்தொற்று பரவலால் ஏற்பட்டுள்ள பாதிப்பால், மேலும் 13 கோடி பேர் இந்த நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்று எச்சரித்தார்.