இலங்கையிலுள்ள பொலிஸார், நவீன தொழில் நுட்பங்களை தமது கடமைகளின் போது பயப்படுத்த வேண்டுமென்ற நோக்கில், சீருடையின் ஒரு பகுதியாக பயன்படுத்தக்கூடிய புகைப்படக் கருவியொன்றை(கெமரா) வழங்குவதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளது.
சீருடையின் ஒரு பகுதியாக பயன்படுத்தக்கூடிய இந்த புகைப்படக் கருவியானது (கெமரா), பிரச்சினைகளை தீர்வுக்கும் முகாமைத்துவம், போக்குவரத்து வாகன முகாமைத்துவத்துக்கும் பெரிதும் உதவக்கூடிய வகையில் அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இதற்காக பயன்படுத்தக்கூடிய ஒரு தொகை புகைப்படக்கருவிகள் (கெமரா) இலங்கை மொபிட்டல் நிறுவனத்தினால் பொலிஸிடம் கையளிக்கட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.