அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டு 2,000 பேர் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் கொரோனா தொற்றில் இரண்டாவது அலை தாக்கும் என வெளியாகியுள்ள புதிய தகவலால், அங்குள்ள மக்கள் பீதியடைந்துள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 2,092 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
இதுவரை அமெரிக்காவில் 87 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு இலக்காகியுள்ள நிலையில்,
சுமார் 49 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இதுவரை சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.
நியூயார்க்கில் மட்டும் 2 லட்சத்து 57 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு இலக்காகியுள்ளனர்.
இதன் அண்டை மாகாணமான நியூஜெர்சியும் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் கடும் பாதிப்புக்கு இலக்காகி இருக்கிறது.
இங்கு 88 ஆயிரத்து 800-க்கும் அதிகமானோரை இந்த வைரஸ் நோய் தாக்கி நிலைகுலையச்செய்துள்ளது.
4,500-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர். இதே போன்று பென்சில்வேனியா, கலிபோர்னியா, மிச்சிகன், இல்லினாய்ஸ் மாகாணங்களிலும் தலா 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே கொரோனா வைரஸ் தொற்றுநோயின் முதல் அலையே இன்னும் முடிவுக்கு வராத நிலையில்,
2-வது அலையும் அமெரிக்காவை புரட்டிப்போடும் என பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
இது தற்போது பரவி வருகிற கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்கத்தை விட கடுமையானதாக இருக்கும் என அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் நோய் தடுப்பு மைய இயக்குனர் ராபர்ட் ரெட்பீல்டு தெரிவித்துள்ளார்.
இதனால், எதிர்வரும் நாட்கள் அமெரிக்காவுக்கு மிகுந்த சோதனை காலம் எனவும், மொதமாக ஸ்தம்பிக்கும் சூழல் ஏற்படலாம் எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.