காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பெண்ணிண் கருப்பையிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சிசேரியன் சத்திரசிகிச்சை மூலம் பிறந்த சபிரீன் அல் சகானி என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது. எனினும் குழந்தை வியாழக்கிழமை உயிரிழந்தது என வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இஸ்ரேல் ஈவிரக்கமின்றி தாக்குதல்
அந்த இளம்தாய் ஏழு மாதங்களாக பிள்ளையை தன் வயிற்றில் சுமந்துள்ளார் – கடும் மோதல்கள் அச்சங்களிற்கு மத்தியில். யுத்தம் முடிவடையும் வரை தங்கள் குடும்பத்தின் அதிஸ்டம் நீடிக்கும் என அவர் எதிர்பார்த்தார்.
எனினும் ஏப்பிரல் 20 திகதி நள்ளிரவிற்கு முன்னர் இடம்பெற்ற பாரியவெடிப்பினால் ஏற்பட்ட சத்தங்கள் தீ பரவலிற்கு மத்தியில் அவர் எதிர்பார்த்த அதிஸ்டம் காணாமல்போனது.
சப்ரீனும் கணவரும் அவரின் மூன்றுவயது மகள் மலாக்கும் உறங்கிக்கொண்டிருந்த ரபா வீட்டின் மீது இஸ்ரேலிய படையினர் வீசிய குண்டால் கர்ப்பிணி பெண் உயிரிழந்த நிலையில், சிசு தாயின் வயிற்றில் இன்னமும் உயிருடன் இருந்தது.
மீட்பு பணியாளர்கள் சப்ரீனை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு சிசேரியன் மூலம் குழந்தை வெளியே எடுக்கப்பட்டது. இந்நிலையில் அந்த குழந்தையும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றமை பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.