கனடாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் 42 வயதான ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
புற்று நோயினால் பாதிக்கப்பட்ட குறித்த குடும்பஸ்தர் கடந்த 23 ஆம் திகதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் வடமராட்சி கம்பர்மலையை சொந்த இடமாக கொண்ட குடும்பஸ்தரே உயிரிழந்தவராவார் .
அதேவேளை உயிரிழந்தவர் விளையாட்டுத்துறைக்கும் அவர் சார்ந்த பொது அமைப்புக்கள் , கழகங்களுக்கும் பெரும்ஆதரவுகளையும் அனுசரணைகளையும் வழங்கி வந்தவர் என்றும் கூறப்படுகின்றது