“உங்கள் வாழ்நாளில் பார்வையிட வேண்டிய உலகின் சிறந்த நாடுகள்” என்ற பட்டியலில் இலங்கைக்கு 5ஆவது இடம் வழங்கப்பட்டுள்ளதாக சி.இ.ஒ. உலக பத்திரிக்கை (CEO World Magazine) அறிவித்துள்ளது.
குறித்த அறிக்கையின் படி, இலங்கைக்கு 60.53 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், இலங்கை வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களுக்கு புகழ்பெற்ற நாடு.
சிறந்த அனுபவங்கள்
குறிப்பாக மலைநாட்டிற்கு வருகை தரும் அனைத்து வகையான பயணிகளுக்கும் ஆயுர்வேத சிகிச்சைகள் முதல் மறக்க முடியாத தொடருந்து பயண அனுபவங்கள் கிடைக்கின்றன.
அது மாத்திரமன்றி, தேயிலை தோட்டங்கள், விசேட உணவுகள் மற்றும் பண்பாட்டு கலாச்சார நிகழ்வுகள் என எதிர்பாராத பலவிதமான அனுபவங்களையும் வழங்குகிறது என பத்திரிக்கை சிறப்பித்து சுட்டிக்காட்டியுள்ளது.
அதேவேளை குறித்த பட்டியிலின் புள்ளிவிபரப்படி, தாய்லாந்து (Thailand) முதல் இடத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.