அம்பாறையில் இஸ்லாம் மதத்தை தழுவவில்லை என சைவ குடும்பத்தின் வீட்டையும் உடமைகளையும் எரித்தார்கள் என்பது யாவரும்அறிந்த விடயம் .
இந்த நிலையில் இதே போன்று வடக்கில் வவுனியாவில் இஸ்லாமியருக்கு காணியை கொடுக்கவில்லை என்பதற்காக ஒரு தமிழரின் சொத்துகளை எரித்து நாசப்படுத்தியுள்ளார்கள்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
வவுனியா சோபால புளியங்குளம் பகுதியை சேர்ந்த நவராஜா என்பவரது மோட்டார் சைக்கிள் நேற்றைய தினம் இரவு அவரது வீட்டில் வைத்து தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் தெரிவிக்கையில்,
சோபால புளியங்குளம் பகுதியில் கடந்த 15 வருடகாலமாக 40 ஏக்கர் காணி ஒன்றிற்காக அப்பகுதியை சேர்ந்த தமிழ் மக்களிற்கும் புதிய சாலம்பைக்குளம் பகுதியை சேர்ந்த முஸ்லிம் மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டு வருகிறது.
இது தொடர்பாக பல தமிழ் அரசியல் வாதிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனினும் முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் அம்மக்களுக்கு சார்பாக அக்காணியை பெறுவதற்கு கடும் பிரயத்தனத்தை மேற்கொண்டு வருகின்றதாக கூறிய அவர், தான் அக்காணியை சட்ட ரீதியாக எமது மக்களுக்கு கிடைப்பதற்கு பெரிதும் பாடுபட்டு வருவதாகவும் விரைவில் அது நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந் நிலையில் அதனை தடுக்கும் முகமாகவும் தனக்கு அச்சுறுத்தல் தரும் வகையிலும் தனது மோட்டார் சைக்கிளை சில முஸ்லிம் அடிப்படைவாதிகள் தீ வைத்திருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள தற்சமயம் பொலிஸார் தீவிர விசாரனைகளை இது தொடர்பாக மேற்கொண்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.