ரயில் நிலையம், மருத்துவமனை போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிக அளவில் கொரோனா வைரஸ் இருந்தால், அதைக் கண்டுபிடிக்கும் கருவி ஒன்றை சுவிஸ் அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.
காற்றில் பரவும் வைரஸ்களை ‘பார்க்கவும், உணரவும்’ கூடிய திறன் கொண்ட சென்சார் ஒன்றைக் கண்டுபிடித்துள்ள அறிவியலாளர்கள், அது கொரோனா பரவலைத் தடுக்க உதவலாம் என்று நம்புகிறார்கள்.
கூட்டமான இடங்களில் பொருத்தப்பட்டுள்ள அந்த உயிரி சென்சார் (biosensor), ஏற்கனவே அதற்கு கொடுக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் மாதிரியுடன் ஒப்பிட்டு, மக்களில் யாருக்காவது அந்த வைரஸ் உள்ளதா என்பதைக் கண்டறிகிறது.
அத்துடன், வைரஸின் வெப்பநிலையையும் ஆராயும் அந்த சென்சார், அதே வெப்ப நிலைகொண்ட வைரஸ் தன்னருகே வரும்போதும் எச்சரிக்கிறது.
இந்த கருவியை Swiss Federal Laboratories for Materials Science and Technology (Empa), Zurich’s Federal Institute of Technology (ETHZ)யுடன் இணைந்து தயாரித்துள்ளது.
இந்த சென்சாரை ரயில் நிலையம், மருத்துவமனை போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பொருத்தினால், அங்கு அதிக அளவிலான கொரோனா வைரஸ் காணப்படும்போது, அதாவது கொரோனா தொற்றுடையவர்கள் அப்பகுதிக்கு வரும்போது, அது எச்சரிக்கும்.
உடனே அதிகாரிகள் அந்த பகுதியிலிருந்து மக்களை அப்புறப்படுத்துவதன் மூலம் தொற்று பரவலைக் கட்டுக்குள் வைக்கலாம்.
இது கொரோனாவைக் கண்டறியும் மையக் கருவியாக பயன்படுத்தப்படாமல், ஏற்கனவே இருக்கும் பரிசோதனை முறைகளுடன் கூடுதல் உதவியாகத்தான் பயன்படுத்தப்பட உள்ளது.
இந்த கருவியில் இன்னும் பல விடயங்களை மேம்படுத்தவேண்டியுள்ளதால், அது இன்னமும் பொது பயன்பாட்டுக்கு வரவில்லை.