சவுதி அரேபிய உச்ச நீதிமன்றம், நீதிமன்ற அமைப்பிலிருந்து பிரம்படி தண்டனையை நீக்கும் உத்தரவை அமல்படுத்தியுள்ளது.
சவுதி நீதிமன்றங்கள் தங்களது தண்டனைகளை சிறை, அபராதம் அல்லது இரண்டின் கலவையாக மட்டுப்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்திற்கான பொது ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.
பிரம்படி தண்டனையை நீக்குவது நீதித்துறை முறையை நவீனமயமாக்க சவுதி மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளில் சமீபத்தியதாகும்.
ஷரியா இஸ்லாமிய சட்டத்தில், பிரம்பால் அடிப்பது தாஜீர் வகையின் கீழ் வருகிறது, அதாவது ஷரியாவுக்கான இரண்டு முக்கிய ஆதாரங்களான குரான் அல்லது ஹதீஸில் தண்டனைகள் குறிப்பிடப்படாத குற்றங்களுக்கு நீதித்துறை அல்லது தலைமையின் விருப்பப்படி வழங்கப்படும் தண்டனை ஆகும்.