நாட்டின் பல பகுதிகளிலும் தற்சமயம் மின்சாரப் பட்டியல் விநியோக செயற்பாடுகள் ஆரம்பமாகியிருக்கின்றன.
எனினும் மின்சாரப் பட்டியலை வழங்குவதற்காக மின்வாசிப்பாளர்கள் வீடுகள் தோறும் வருவதில்லை.
இதனால் பலருக்கும் அநீதி ஏற்படலாம் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இருப்பினும் எந்தவொரு அசாராதணமும் மக்களுக்கு ஏற்படாத வகையில் மின்பட்டியல் தொகுக்கப்படும் என மின்சக்தி அமைச்சின் அபிவிருத்திப் பிரிவு பணிப்பாளர் சுலக்சன ஜயவர்தன தெரிவிக்கின்றார்.
இதன்படி ஏதாவது குழப்பங்கள் இருந்தால் மின்சக்தி அமைச்சின் அல்லது மின்சார சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பிரவேசித்து தங்களுக்கான கட்டணம் எவ்வளவு என்பதை தெரிந்துகொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.