தமிழ் திரையுலகின் சிறந்த வில்லன் நடிகர்களில் ஒருவர் செந்தாமரை, ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்தார்.
மேடை நாடகங்கள் மூலம் சினிமாவுக்கு வந்த செந்தாமரைக்கு மூன்று முகம் படம் நல்ல பெயரை பெற்றுத் தந்தது.
புகழ்பெற்று விளங்கிய காலத்திலேயே உடல்நலக்குறைவால் காலமானார், இவரது மனைவியின் பெயர் கௌசல்யா.
தற்போது சின்னத்திரை நாடகங்களில் பிஸியாக நடித்து வருகிறார், பூவே பூச்சூடவா சீரியலில் வில்லத்தனத்தாலும், குணச்சித்திர நடிப்பாலும் கலக்கி வரும் கௌசல்யாவுக்கு தற்போது வயது 72.