தென்கொரியாவில் மருத்துவச் சிகிச்சைகள் எதுவுமின்றி தாய்ப்பால் மட்டுமே குடித்து கொரானாவிலிருந்து குழந்தை ஒன்று மீண்டுள்ளது.
தென்கொரியாவில் பிறந்து 27 நாள்களே ஆன பெண் குழந்தை ஒன்று காய்ச்சலுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
அதைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பதைக் கண்டறிந்தனர்.
உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோரைப் பாதித்துள்ள கொரோனாவுக்கென்று பிரத்யேக மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
பிற நோய்களுக்கான மருந்துகள் மூலம்தான் கொரோனா குணப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பிறந்து 27 நாள்களே குழந்தைக்கு எப்படி சிகிச்சை அளிப்பது என தென்கொரிய மருத்துவர்கள் ஆலோசித்தனர்.
3 வாரங்களுக்குக் குழந்தைக்குத் தாய்ப்பால் தவிர வேறு எதுவும் கொடுக்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது.
வேறு எந்தச் சிகிச்சையோ மருந்துகளோ தரப்படவில்லை. 20 நாள்களுக்குப்பின் குழந்தைக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா நெகடிவ் ஆகியிருப்பது உறுதி செய்யப்பட்டது.
வெறும் தாய்ப்பால் மூலமே குழந்தை குணப்படுத்தப்பட்டிருந்தாலும் இந்த முறை மற்றவர்களுக்குப் பொருந்தாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பெரியவர்களுடன் ஒப்பிடுகையில் பிறந்த குழந்தையின் நோய் எதிர்ப்புச் சக்தி தனித்தன்மை கொண்டது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.