இலங்கையில் மார்ச் 11 முதல் இன்று பகல் வரையான காலப்பகுதியில் கொழும்பு உட்பட 19 மாவட்டங்களில் 467 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.
நேற்று (25) மாத்திரம் 40 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 120 பேர் குணமடைந்துள்ளனர்.
330க்கும் அதிகமானோர் பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருகின்றனர். வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 273 பேர் மருத்துவ கண்காணிப்பில் இருந்துவருகின்றனர்.
மாவட்ட ரீதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை வருமாறு,
கொழும்பு – 154
களுத்துறை -59
புத்தளம் -37
கம்பஹா -34
யாழ்ப்பாணம் – 16
கண்டி – 7
இரத்தினபுரி – 7
கேகாலை -5
குருணாகலை – 12
மாத்தறை – 2
அம்பாறை – 2
பதுளை -1
காலி – 1
மட்டக்களப்பு -1
வவுனியா – 1
பொலன்னறுவை – 01
அநுராதபுரம் – 04
மொனறாகலை – 02
மாத்தளை -01