யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் தனிமைப்படுத்தலுக்காக இராணுவத்தினர் தங்க வைக்கப்படுவதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு வெளியாகியமையினால் அப்பகுதியில் இன்று (27.04.2020) காலை ஏராளமான இராணுவமும் பொலிஸாரும் குவிக்கப்பட்டமையினால் பதற்றமான நிலை காணப்பட்டது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணத்தில் இருந்து விடுமுறைக்காக தமது ஊர்களுக்கு சென்ற இராணுவத்தினரை மீள கடமைக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை 21 நாட்கள் தனிமைப்படுத்த யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியின் இரண்டு விடுதிகள் ராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மக்கள் அச்சமடையத் தேவையில்லை.கொரோனா தொற்றுடைய எவரையும் கல்லூரிக்கு அழைத்து வரவில்லை.
யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேசத்தில் கடமையாற்றி விடுமுறையில் நிற்கின்ற இராணுவத்தினரையே தனிமை படுத்துவதற்காகவே கல்லூரியில் 2 விடுதிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
எனினும் இதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு வந்தமையினால் இராணுவமும் பொலிஸாரும் களமிறக்கப்பட்டனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான நிலமை காணப்பட்டது.