பருத்திதுறை நகரசபை இலங்கையில் நடைசெய்துள்ள கசிப்பு ஊற்பத்தியை ஊக்கித்துவருவதாக பிரதேச மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
பருத்திதுறை நகரசபை பருத்துறை சந்தையின் கழிவு பொருட்கள் காலவதியான மரக்கறிவகைகள் போண்றவற்றை தமது நகரசபைக்கு சொந்தமான வாகனத்தில் ஏற்றி வந்து வடமறாசியின் துன்னாலை கிழக்கு பகுதியில் உள்ள ஓடைக்காசு இந்து மயாண பகுதியில் தனியார் நிலங்களிலும் வயல்களுக்குள்ளும் கொட்டிவிட்டு தப்பி ஓடுகின்றனர்.
துன்னாலை கிழக்கு பகுதியில் வசிக்கும் நெல்லியடி பொலிஸ் பிரதேசதற்கு உட்பட்ட ஒரு பகுதி பாடசாலைக்கு பொகாத இழைஞர்கள் குறித்த பருத்தித்துறை நகரசபையினால் துன்னாலை கிழக்கு பகுதியில் கொட்டபடும் கழிவு பொருட்களை பகுதிபகுதிகளாக வேறாக்கி தரம்பிரித்து அயலில் உள்ள பற்றைக்குள் வைத்து கசிப்பு காச்சி அவற்றை வடமராட்சி எங்கும் ஒரு போத்தல் கசிப்பு 800 ரூபாய்க்கு விற்று வருகின்றனர்.
குறோணா நோயல் குடிகாரர்களின் மதுபானகடைகள் அனைத்தும் பூட்டி உளள நிலையில் பருத்தித்துறை நகரசபையால் கொட்டபட்ட கழிவு பொருட்களை மூலப்பொரட்களாக பயன்படுத்தி கசிப்பு உற்பத்தி வடமராட்சியில் கொடி கட்டி பறக்கிறது.
இது தொடர்பாக உற்பத்தியாளரிடம் கேட்டபோது பருத்திதுறை நகரசபை கழிவுகளை துன்னாலை கிழக்கு பகுதிக்கு தாமகவே கொண்டு வந்து தருகிறார்களால் நாம் அவற்றை பணமாக்குகிறோம் என்று கசிப்பு உற்பத்தியாளர்கள் பெருமையுடன் தெரிவித்தனர்.