சிலாவத்தையை சேர்ந்த சந்திரன் கம்ஷிகா எனும் பாடசாலை மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மிக சுட்டியான விறுவிறுப்பான எதற்கும் அஞ்சாத ஓர் மாணவி…
தனது தந்தையுடன் ஓர் மகனை போன்று விவசாயம் தொடக்கம் அனைத்திலும் தந்தைக்கு தோள் கொடுக்கும் மகளாகவே இருந்து வந்தவள்.
அவளது குடும்பத்தில் நான்கு பெண்குழந்தைகள்..ஆதலால் இவள் தன்னை ஓர் மகனாக எண்ணியே படிப்பிலும் சரி , பாடசாலை விளையாட்டுக்களிலிலும் சரி கெட்டிக்காரியாகவே வலம் வந்தாள்.. நான் கூட குழப்படி என்றுதான் அவளை கூப்பிடுவேன்…
அவள் தற்கொலைக்கு முன் வைத்த காரணம் தான் அதிர்ச்சியாக உள்ளது. க.போ.த சாதாரண தரத்தில் அனைத்து பாடங்களிலும் சித்தி பெற்று சிலாவத்தை பாடசாலையில் 3வது நிலையில் உள்ளாள்.
ஆனால் தான் 9 பாடங்களிலும் A தர சித்தி பெறுவேன் என்று ஆசிரியர்களுக்கும், சக மாணவர்களுக்கும் ,பெற்றோருக்கும் கூறி வந்துள்ளாள்.
இந்த நிலையில் நேற்றைய தினம் பரீட்சை பெறு பேறுகள் வெளியாகியது.
அவள் எதிர் பார்த்த பெறுபேறு வரவில்லை. ஆனால் அனைத்து பாடமும் சித்தியடைந்துவிட்டாள்..ஆசிரியர்கள் அவளை தொலைபேசியில் வாழ்துவதற்கு தொடர்பு கொண்ட போது கூட யாருடனும் பேச மறுத்துள்ளாள்.
அவளது வீட்டில் தந்தை தாய் சகோதரர்கள் கூட அவளை வாழ்த்திய வண்ணம் தான் இருந்தனர்.
ஆனால் அவள் தன்னால் 9A சித்தி பெற முடியவில்லை என்ற மனவுளைச்சலுடன் இருந்து இன்று காலை 7.30 am(28.04.20) மணியளவில் வீட்டில் அனைவரும் தமது காலை கடமைகளை செய்து கொண்டிருந்த போது சாமி அறையை பூட்டி விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாள்..
அவ்வளவு திறமை இருந்தும் அவ்வளவு சிறப்பாக பெறுபேறு பெற்றும் இவ்வாறு ஒரு முடிவை எடுத்து குடும்பத்தையும், ஆசிரியர்கள்,சக மாணவர்கள் ,கிராம மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி விட்டாள்.. அவள் அந்த பெறுபேற்றுடன் உயர்தரம் கற்று சாதித்திருக்க வேண்டும்.. அவசரபட்டு விட்டாள்
நான் படித்த போது 10A எடுத்தவர்கள் AL லில் கோட்டை விட்டும் 3C,4S ,எடுத்தவர்கள் வைத்தியர்களாகவும் உள்ளனர்.
ஆகவே 9A எடுத்து தான் உயர்த்தப் கற்க வேண்டும் என்ற மனநிலையை முதலில் மாற்ற வேண்டும். அப்படி 9A எடுக்க வேண்டும் என்று யாராவது கட்டாய படுத்தாதீர்கள்.
அவர்களால் என்ன முடியுமோ அதை மட்டுமே அவர்கள் செய்ய ஊக்குவியுங்கள் அது மட்டும் போதும்..
தற்கொலைகள் எதற்கும் தீர்வல்ல…