2019ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் மகளிர் உயர்தரப் பாடசாலையில் 58 மாணவிகள் 9 பாடங்களிலும் அதிதிறமைச் சித்தி (ஏ) பெற்றுள்ளனர்.
டிசெம்பரில் இடம்பெற்ற க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் மகளிர் உயர்தரப் பாடசாலையில் 251 மாணவிகள் தோற்றியிருந்தனர்.
அவர்களில் தமிழ்மொழிமூலம் 177 மாணவிகளும் 74 மாணவிகள் இருமொழிமூலம் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.
இந்த நிலையில் 58 மாணவிகள் 9 பாடங்களிலும் அதிதிறமைச் சித்தி (ஏ) பெற்றுள்ளனர்.
அவர்களில் 34 மாணவிகள் தமிழ்மொழிமூலம் 24 மாணவிகள் இருமொழிமூலமும் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.
36 மாணவிகள் 8 பாடங்களில் அதிதிறமைச்சித்தி (8ஏ), 36 மாணவிகள் 7 பாடங்களில் அதிதிறமைச்சித்தி (7ஏ), 37 மாணவிகள் 6 பாடங்களில் அதிதிறமைச்சித்தி (6ஏ) மற்றும் 21 மாணவிகள் 5 பாடங்களில் அதிதிறமைச்சித்தி (5ஏ) பெற்றுள்ளனர்.
பாடசாலையின் பெறுபேறுகளின் அடிப்படையில் தமிழ், கணிதம், சைவ சமயம் மற்றும் றோமன் கத்தோலிக்கம், வரலாறு மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் அனைத்து மாணவிகளும் சித்திபெற்று 100 சதவீதம் சித்தியை அடைந்துள்ளதாக பாடசாலை பதில் அதிபர் திருமதி எஸ்.சுனித்திரா அறிவித்துள்ளார்.
மேலும் க.பொ.த. உயர்தரத்தில் கல்வியைத் தொடர பரீட்சைக்குத் தொற்றிய 251 மாணவிகளும் தகுதியைப் பெற்றுள்ளனர்.