யாழ்ப்பாணத்தில் தினமும் கொரோனாத் தொற்றுத் தொடர்பில் 200 பரிசோதனைகளை மேற்கொள்ளவேண்டும் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திலும், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையிலும் இதனை முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் தற்போது தினமும் 30 சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனை அதிகரிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் சோதனைகளை அதிகரிப்பதன் ஒரு பகுதியாகவே யாழ்ப்பாணத்திலும் சோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்று அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
சமூகரீதியான சோதனைகளை முன்னெடுப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளதால் நாடு முழுவதும் சோதனைகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் மாத்திரமே சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இரண்டொரு தினங்களில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் பரிசோதனைகள் ஆரம்பமாகவுள்ளமை