பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் நிவாரணங்களை வழங்க வேண்டுமென முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிததுள்ளார்.
இணையதளமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு பாரியளவில் நிதி உதவிகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அதனைக் கொண்டு பொருளாதார ரீதியில் அழுத்தங்களை எதிர்நோக்கும் மக்களுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டுமெனவும் கோரியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மாதாந்த சம்பளம் பெற்றுக்கொள்வோர், நாள் சம்பளம் பெற்றுக்கொள்வோர், சுய தொழிலில் ஈடுபடுவோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பெரும் எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷ் உள்ளிட்ட சில நாடுகளில் கைத்தொழிற்சாலைகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு சம்பளங்களை வழங்குவதற்கு அந்தந்த நாடுகளின் அரசாங்கங்கள் உதவி வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையிலும் இவ்வாறான ஓர் தலையீடு மேற்கொள்ளப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.