சீனாவால் அனைத்து நாடுகளும் நரக வேதனை அனுபவித்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரவித்துள்ளார்.
சீனாவின் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 31லட்சத்தை கடந்துவிட்டது. பலி எண்ணிக்கை 2,17,970ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், சீனா மீது உலக நாடுகள் பெரும் கோவத்தை கொக்கரித்து வருகின்றன. இதில், அமெரிக்க, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் விசாரணை என்ற அளவில் கூட சென்றுவிட்டன.
அமெரிக்க எம்.பி.க்கள் பலர் சீனாவை நம்பியிருக்கும் உற்பத்தி துறையையும் கனிமவளங்களையும் விடுவிக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்.
“கண்ணுக்குத் தெரியா விரோதி’ கொரோனாவை சீனா அதன் முளையிலேயே கிள்ளி எறிந்திருந்தால் இன்று 184 நாடுகள் நரக வேதனையை அனுபவித்து வராது என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்..
அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி அரசியல் தலைவர்கள் அனைவரும் சீனா மட்டும் சுயநலமாக இல்லாமல் கொரோனா பற்றிய தகவலை ஒழுங்காகப் பகிர்ந்திருந்தால் இன்று இவ்வளவு மரணங்களையும் பொருளாதார சீரழிவுகளையும் சந்திக்க நேரிட்டிருக்காது.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களக்கு பேட்டி அளித்த டிரம்ப், “184 நாடுகள், இதை நான் அடிக்கடி கூறுவதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். நம்ப மிகவும் கடினமாக இருக்கிறது. கொரோனாவை அது தோன்றிய இடத்திலேயே கிள்ளி எறிந்திருக்க வேண்டும். ஆனால் செய்ய வில்லை, இதனால் இன்று 184 நாடுகள் நரக வேதனையை அனுபவித்து வருகின்றன
அமெரிக்கா தன் தொழிற்துறையில் சீனாவை நம்பியிருப்பதை குறைக்க வேண்டும் என்றும் சீனாவிடமிருந்து கொரோனா இழப்பீடாக பெரிய தொகையைக் கேட்க வேண்டும் என்றும் அமெரிக்காவில் அதிபர் டிரம்புக்கு அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன.
சீனாவினால் பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது, இதனால் சீனாவுக்கு கொடுக்க வேண்டிய இறக்குமதி நிலுவைத் தொகையைக் கொடுக்க வேண்டாம் என்றும் இதனை கொரோனா பாதிப்பு இழப்பீடாக சரிக்கட்ட வேண்டும் என்றும் டிரம்புக்கு செனட்டர்கள் நெருக்கடி அளித்து வருகின்றனர்.
எனவே கொரோனா தாக்கம் முடிந்தவுடன் சீனாவுடனான வர்த்தகம் குறித்த முக்கிய முடிவுகளை அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகள் எடுக்கும் என்று தெரிகிறது.